திருமூலர்

திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.

திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது. உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது. பன்னிரண்டாம் திருமுறை பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தை உள்ளடக்கியுள்ளது. சேக்கிழார் நம்பியாண்டார் நம்பியின் பிற்காலத்தவராதலால், நம்பியாண்டார் நம்பியால் பகுக்கப்பட்ட ஆரம்பத் திருமுறைப் பகுப்பில் இது உள்ளடக்கப்படவில்லை.

சைவ சமயத்தின் இலக்கியமான பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கின்றனர். இந்த தேவாரத்தினைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரை தேவார மூவர் என்று அழைக்கின்றனர். பன்னிரு திருமுறைகள் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 10-ம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 11-ம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.