சட்டைமுனி சித்தர்

பாழான மாய்கைசென்று ஒளிவ தெப்போ?
பரந்தமனஞ்செவ்வாயாய் வருவதெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயா?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதேன்றால் மூலம்பாரே !

மூலமதி லாறுதலங் கீழே தள்ளி
முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக்
கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக்
கொடியதொரு ஞானசக்திக் குள்ளேமைந்தா!
பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப்
பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்
காலமொடு பிறப்பிறப்புங் கடந்து போகுங்
கைவிட்ட சூத்திரம்போல் சடமு மோங்கே!!
– சட்டைமுனி முன் ஞானம்.

விளக்கம்:
பாழாக்கும் பெண் மயக்கமும், உலக மயக்கமும் துறந்து, மனதிற்கு விலங்கு மாட்டி
மயக்கமற்று, மெளனமாக மூலத்தில் மனதை வைத்து, குண்டலினியை எழுப்பி,
படிப்படியாக மூலாதாரம், மணிபூரகம், அநாகதம், ஆகினை, துரியம், விசுத்தி என்ற
ஆறு தலங்களை அடைந்தால், பிறப்பு இறப்பு இல்லா நிலையை அடையலாம், மேலும் காலத்திற்கும் அழியாமல் மரணமிலா பெருவாழ்வு கிடைக்கும் என்கிறார் சித்தர் சட்டைமுனி.

“அண்டத்தில்உள்ளதேபிண்டம், பிண்டத்தில்உள்ளதேஅண்டம்”
“அண்டமும்,பிண்டமும்ஒன்றேஅறிந்துதான்பார்க்கும்போது”
– சட்டைமுனிஞானம்