
அகத்தியர்
அகத்தியம் என்பது பண்டைய தமிழி மொழி மற்றும் தற்கால தமிழ் மொழியை உடைய மக்களினத்தைக் குறிக்கும் மிகவும் தொன்மையான தமிழி மற்றும் தமிழ் மொழிக்கான இலக்கண நூல் எனத் தெளிவுபட கருதப்படுகின்றது. அகத்தியர் என்ற புலவர் இயற்றிய நூலாதலால், இது அகத்தியம் என்றும் வழங்கப்படுகின்றது. அகத்தியத்தில் முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று தமிழ் ஆய்வாளர்கள் அய்யம் இன்றி உரைக்கின்றனர்.
இலக்கண விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது. தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு. திருவாரூரைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் என்பவர் இந்நூலை இயற்றினார்.
தாரகன் என்னும் அசுரன் கடும் தவம் புரிந்ததன் மூலம், கடலுக்குள் சென்று ஒளிந்து வாழும் வரத்தினையும், ஒரு குடம் அளவு உள்ளவரால் தான் தனக்கு மரணம்அமையவேண்டும் என்ற வரத்தையும் பிரம்மனிடம் இருந்து பெற்றுக்கொண்டான். இந்த உலகத்தை அசுரர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, முனிவர்களையும், மனிதர்களையும் தன் அசுர கூட்டத்துடன் சென்று துன்புறுத்த ஆரம்பித்தான். இதனால் தேவர்களுக்கான பூஜைகளும், யாகங்களும் தடைப்பட்டது. தேவர்களுக்கான சக்திகளும் குறைந்தது.