
கொங்கணர்
கொங்கணர் அடிப்படையில் ஒரு இளவரசர் கொங்குநாட்டில் மகராஜன் எனும் மன்னனின் ஒரே மகனாவார். தனது 16வது வயதிலேயே காடுகளை வலம் வரவேண்டும் என்ற ஆசையை தனது தந்தையிடம் முறையிட அவரும் ஏற்பாடு செய்தார். காடு மலைகளை சுற்றி வந்த இளவரசர் பிற உயிர்களின் கஷ்டம் அறியாதவராக தனது கண்களில் பட்ட பறவை விலங்கு செடி கொடிகள் அனைத்தையும் தனது வாளினால் வெட்டி வீசி எறிந்து கொண்டே வந்து ஓர் இடத்தை வந்து அடைந்தார். அந்த இடத்தில் இருந்த சுனை நீரில் தனது வாளின் இரத்தக் கரைகளைக் கழுவ, அந்த நொடியில் ஆச்சரியமும் அற்புதமும் நிகழ்ந்தது. இவரால் வெட்டப்பட்ட உயிர்கள் அனைத்தும் மீண்டும் உயிர்த்தெழுந்தது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த கணம் அவர் மனதை மாற்றியது. இந்த நிகழ்வே இவர் அரச வாழ்வை துறந்து துறவு வாழ்வில் அடியெடுத்து வைக்க காரணமாயிருந்தது. அங்குள்ள குகை ஒன்றில் தவம்செய்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தார், அங்கே உத்தண்ட வேலாயுத சாமி திருக்கோவிலை உருவாக்கினார்.
போகரின் சீடர்களுள் கொங்கணர் வேறுபட்டுக் காணப்பட்டார். கொங்கணர் கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று அழைக்கப்பட்டார் என்பர்.அடிப்படையில் ஆசாரி குலத்தை சேர்ந்தவர் என்றும் இரும்புக் கலம் செய்வது இவர்கள்குலத் தொழிலாக இருந்தது என்றும் கூறுவார். தொடக்கத்தில் அம்பிகை பக்தராக இருந்த இவரை தனது திருமணத்திற்குப் பிறகு மனைவியின் பேராசையால் பீடிக்கப்பட்டார். . காரணம் அதிக பணம் சம்பாதிக்காத தனது கணவனை பேடி என வசை பாட, அதற்கான குறுக்கு வழியை இவர் யோசித்தார். சித்த யோகியானால் இரும்பை தங்கமாக்கலாம் என்றும் காசும் தங்கமும் சேர்த்து வாழ்வில் கடைத்தேறி விடலாம் என்றும் எண்ணினார். . ஆனால் இவரது குருவான போகரின் உபதேசம் இவரை சிறந்த சித்தராக மாற்றியது எனலாம். தவம் செய்து தனது மாயையில் இருந்து மீள முயற்சித்தார்.
கொங்கணர் கற்ற பாடங்கள்
ஒரு முறை கொங்கணர் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்பொழுது கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டது. கொங்கணரின் தவமும் கலைந்தது. தவம் கலைந்த கொங்கணர் கொக்கை சினத்துடன் நோக்க அந்த நொடியிலேயே கொக்கு எரிந்து சாம்பல் ஆகி விட்டது. தவத்தில் இருந்து மீண்ட காரணத்தால் பசி அவரை வாட்டியது. அவர் உணவுதேடி செல்லும் வழியில் ஓர் வீடு இருந்தது. அந்த வீட்டின் முன் நின்று இவர் உணவை யாசகமாகக் கேட்டார். அந்த வீட்டில் வாசுகி அம்மையார் தனது கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால் சிறிது காலம் தாழ்த்தி உணவு கொண்டு வந்தார். பசியால் வாடிய கொங்கணருக்கு சினம் வந்து அந்த அம்மையாரை நோக்க நான் ஒன்றும் கொக்கல்ல கொங்கனரே என்று அந்த அம்மையார் கூறியதும் அந்த அம்மையாரின் ஞான திருஷ்டியையும் கற்பின் திண்மையையும் கண்டு வியந்தார். தமது சினம் கண்டு வெட்கினார். அங்கிருந்து கிளம்பினார். வழியில் தர்மவியாதன் என்பவரை சந்தித்தார்