

18 சித்தர்கள்
சித்தர் குறிப்புகள் மட்டும் இந்த ஏட்டில் இடம் பெற்று இருக்கும்இதனை ஞான
தேடலில் உள்ளவர் அனைவரும் படிக்க வேண்டும்
சித்தர் குறிப்புகள்
18 சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி, யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர். மனித குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். கடவுள் பக்தியுடையவர்களாக சதுரகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.
சித்தர்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்
“ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாரும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே”
சித்தன் வழியே சிவன் வழி
கடவுளைக் காண முற்படுகிறவன் பக்தன்!!!
அவனைக் கண்டுணர்ந்தவன் சித்தன்!!!

சித்தர் பீடங்களை தரிசிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த கோவில் அவசியம். இது மிகவும் சக்தி வாய்ந்தது நிறைய அதிர்வுகளை இங்கு உணர முடியும்.

மிகவும் பழமையான ஆனால் அழகான மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை கோவில். கோபுரத்தைப் பார்த்தாலே வியப்பாக உணர்வீர்கள்.

இது ஒரு பழமையான 18 சித்தர்கள் கோவில் மற்றும் உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இக்கோயில் சித்தர்களால் தெய்வீகமாக ஆசீர்வதிக்கப்பட்டதாக அவர்கள் நம்புகிறார்கள்.

இது ஒரு அழகான மற்றும் அழகான கோயில், இது ஒரு தரிசனத்திற்கு தகுதியானது. சுறுசுறுப்பான கோவில். இடம் நன்றாகவும் மற்ற கோவில்களுக்கு அருகாமையாகவும் உள்ளது.
கீழடி 18 சித்தர் திருக்கோவில்

கீழடி 18 சித்தர் திருக்கோவில்
New & Free Styles of Yoga
THINGS TO DO AT MORNING
Why you should do Yoga
மனித இனத்தின் உயர்ந்த பண்புகள், செயல்கள் போன்ற அனைத்திற்கும் மூலமாக விளங்குவது ஆன்மீகம். சித்தர்கள் என்றாலே சித்திகள் கைவரப் பெற்றவர்கள், அவர்களுடைய அறிவுரைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் வழியாகத்தான் மக்களை சென்றடைந்திருகின்றன. சித்தர்கள் தங்கள் கருத்துகளைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்கப் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள். ஆன்மீகம்,யோகம், தத்துவம், மருத்துவம், இயற்கை, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று பல நிலைகளில் தம் பாடல் கருத்துகளை வழங்கியுள்ளனர்.